மழைக்காலம் ஸ்டார்ட்ஸ்! தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா...?
monsoon season starts Heavy rain warning 3 districts Tamil Nadu today Is your town list
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழைச் செயல்பாடுகள் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் நிலவும் காற்றழுத்த மாற்றங்களால் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இருந்து கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வருகிறது.

இன்றைய மழை நிலவரம்
இன்று தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேபோல், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய வானிலை நிலவரம்
நாளை தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.மேலும், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை படிப்படியாக குறையும்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.இன்று சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். அதேநேரத்தில், அடுத்த சில நாட்களில் வெப்பநிலை இயல்பு நிலையை ஒட்டியே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகத்தில் வெப்ப அசௌகரியம்
அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் இணையும் காரணத்தால் வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று வெப்பம் சார்ந்த அசௌகரிய நிலை ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு மழை வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நகரில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பம் காரணமான அசௌகரியமும் நீடிக்கலாம்.நாளையும் இதேபோன்ற வானிலை நிலவும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.
English Summary
monsoon season starts Heavy rain warning 3 districts Tamil Nadu today Is your town list