அச்சத்தில் மக்கள்! நாளை முதல் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் தொடங்குகிறது...!
Katthiri heat wave called Agni Nakshatra will begin from tomorrow
கோடை வெயிலானது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

மேலும், கோடை காலத்தையொட்டி வரும் 'கத்திரி வெயில்' காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
இது மக்களுக்கு கடுமையான காலமாகவும் கருதப்படும்,அவ்வகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100°F க்குமேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் 'அக்னி நட்சத்திரம்' தொடங்குகிறது.
இதனால் வானிலை ஆய்வு மையம், 'வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்' எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெயிலை நினைத்து மக்கள் பீதியில் உள்ளனர்.
English Summary
Katthiri heat wave called Agni Nakshatra will begin from tomorrow