நேற்று பெய்த மழையால் ஏற்காட்டில் பதிவான மழை அளவு எவ்வளவு...?
How much rainfall recorded Yercaud due to yesterdays rain
சேலத்தில் பல இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும், ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்த மழை மாலை 6 மணி வரை என 2 மணி நேரம் கனமழை பெய்தது.

இதைத்தொடர்ந்து இரவிலும் சாரல் மழை பெய்தது.இதனால் அங்கு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி,தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
அதேபோல் நேற்று மாலை ஓமலூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான தூரலுடன் நின்றதால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.அந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 20.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஓமலூர் 12.4, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 2, சேலம் மாநகர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
English Summary
How much rainfall recorded Yercaud due to yesterdays rain