கனமழை எச்சரிக்கை; சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை..!
Holiday for schools and colleges in Chennai tomorrow
கனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்) காரணமாக சென்னையில் நாளை (டிசம்பர் 03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை (டிசம்பர் 03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
English Summary
Holiday for schools and colleges in Chennai tomorrow