கொளுத்திய வெயிலுக்கு சின்ன ஆறுதல்: அக்னி நட்சத்திர முதல்நாளில் சென்னையில் கனமழை..!
Heavy rain in Chennai on the first day of Agni Nakshatra
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்திய நிலையில், சென்னையில் சூறைக்காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. காலையில் இருந்தே சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் பிற்பகலுக்கு பின்னர் தலைநகர் சென்னையின் கால நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதில், நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுட்ன் கனமழை பெய்து வருகிறது.

அந்தவகையில், ஈக்காட்டுத் தாங்கல், தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, பெரம்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், எழும்பூர், வேப்பேரி என நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
அத்துடன், ஆவடி, அம்பத்தூர், எண்ணூர், காசிமேடு, வண்டலூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், முடிச்சூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
English Summary
Heavy rain in Chennai on the first day of Agni Nakshatra