இடி மின்னலுடன் கூடிய அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா...?
Do you know which districts are likely to experience rain with thunderstorms for the next 3 hours
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது .இதில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அவ்வகையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள மாவட்டங்கள் , திண்டுக்கல்,காஞ்சிபுரம், சென்னை, குமரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர்,செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறத்தப்படுகிறது.
English Summary
Do you know which districts are likely to experience rain with thunderstorms for the next 3 hours