புயல் எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது: இந்திய வானிலை மையம்..!
Cyclone warning issued as low pressure area formed in Bay of Bengal strengthens
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ருள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறதாகவும், தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும், வங்கக் கடலில் அக்டோபர் 27-ஆம் தேதி புயல் உருவாகிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 27 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று கூறியுள்ளது.
English Summary
Cyclone warning issued as low pressure area formed in Bay of Bengal strengthens