வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல்...! தமிழகத்தில் கனமழை எப்போது...?
Cyclone Montha forming Bay of Bengal When heavy rains occur Tamil Nadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து, பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் விளைவாக மாநிலம் முழுவதும் ஏரி, குளம், அணைகள் நிரம்பி வழிகின்றன.மேலும் வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (சனிக்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

இது தொடர்ந்து அக். 27-ந்தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்படும். இது தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது; அர்த்தம் “அழகான மலர்” எனப்படுகிறது.
இந்த புயல் பாதை தெளிவாகத் தெரியாத நிலையில், அது தமிழகத்துக்கு அருகில் நகர்ந்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஆனால் ஆந்திரா நோக்கி நகர்ந்தால், வடமாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.இதற்கிடையில், மத்திய–மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் அபாயம் இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Cyclone Montha forming Bay of Bengal When heavy rains occur Tamil Nadu