சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கும் டிட்வா புயல்..!
Cyclone Ditwah remains in place without moving as a deep depression
'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை (டிசம்பர் 01) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 03 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்த நிலையில் கடந்த 06 மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிக்கிறது. வரும் அடுத்த 06 மணி நேரத்துக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு 50 கி.மீ தூரத்தில் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும்போது நள்ளிரவு சென்னையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
English Summary
Cyclone Ditwah remains in place without moving as a deep depression