சைபர் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை; ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்..!
Sanchar Saathi app is mandatory on smartphones to prevent cybercrime
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் புதுப்புது ஐடியாக்களுடன் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பயனாளிகளை காக்கும் வண்ணம், மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதியதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு மத்திய தொலைதொடர்வு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நவம்பர் 28-ஆம் தேதியே மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டு ட்டது. மேலும், புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலும், இந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Sanchar Saathi app is mandatory on smartphones to prevent cybercrime