சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
Chennai Rain Agni Natchatram Heavy orange alert
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
மாலை 4 மணி முதலே சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டிய நிலையில் காணப்பட்டது.
அடுத்த சிறுது நேரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது.
இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை மழை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Chennai Rain Agni Natchatram Heavy orange alert