கோவை, நீலகிரிக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்...?
Chennai Meteorological Department issues warning for Coimbatore and Nilgiris
கடந்த சில நாட்களாகவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.இந்நிலையில் நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம், இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே கோவை மாநகர் பகுதிகளான உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும், புறநகர் பகுதிகளான சிறுமுகை, பேரூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
அதுமட்டுமின்றி,மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று குன்னூர், கூடலூர், பந்தலூர்,ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மேலும்,குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், குன்னூரில் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Meteorological Department issues warning for Coimbatore and Nilgiris