தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யப் போகும் மாவட்டங்கள்.!!
29 dec rain in tamilnadu
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இன்று தென் மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மனம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.