தீடீர் ட்விஸ்ட்... உறவினரால் நயினாருக்கு சிக்கல்? வெளியான பரபரப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய 4 கோடி ரூபாய் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கியது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை‌. எனவே நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சற்று முன்னர் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்திற்குள் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் நயினார் நாகேந்திரனின் பி.ஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால் சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு பெருமாள் என்பவரை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் வைத்திருந்ததாக கைதான மூன்று பேரில் ஒருவர் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nainar relative say Rs4crore caught in Tambaram belongs to him


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->