மத்திய அரசு மின்னஞ்சல் சேவைகளில் ‘Zoho’! — வாட்ஸ் ஆப் ஓவர்.. தற்போது கூகுள் பேவிற்கும் செக்.. வருகிறது Zoho Pay!
Zoho in central government email services WhatsApp over Now Google Pay is also available Zoho Pay is coming
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட உலகத் தரமான மென்பொருள் நிறுவனம் ஸோஹோ (Zoho) — இந்திய தொழில்நுட்ப துறையில் இன்னொரு பெரிய அடியை எடுத்து வைக்க இருக்கிறது.இந்த முறை, பயனர்களுக்கான கட்டணச் செயலி மூலமாகவே!
அதாவது, Zoho நிறுவனம் தனது புதிய ‘Zoho Pay’ எனும் நுகர்வோர் கட்டணச் செயலியை அக்டோபர் 22, 2025 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த Zoho Pay செயலி தனியாகவும், அதே நேரத்தில் ஸோஹோவின் பிரபல ‘அரட்டை’ (Arattai) மெசேஜிங் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டும் வெளியாகவுள்ளது.இதன் மூலம், பயனர்கள் அரட்டையிலேயே பண பரிமாற்றங்கள் செய்யலாம் — செயலியை விட்டு வெளியேறவே வேண்டாம்!
இதனால், Google Pay, PhonePe போன்ற முன்னணி கட்டண செயலிகளுக்கு நேரடி போட்டியாக Zoho வரவுள்ளது.
Zoho Payments Tech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் இதுகுறித்து கூறியதாவது —
“Zoho Pay பயனர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையில்லா பரிவர்த்தனை அனுபவத்தை வழங்கும். இது ஒருங்கிணைந்த கட்டண தளமாகவும், நம்பகமான நிதி பரிவர்த்தனை அமைப்பாகவும் செயல்படும்,” என தெரிவித்தார்.
மேலும், Zoho தனது புதிய POS (Point of Sale) சாதனங்களையும், பல நிதி தொழில்நுட்ப மென்பொருட்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.
இது மூலம் வணிக நிறுவனங்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் முழுமையான நிதி தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு — கடந்த ஓராண்டாக — தனது 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகளை, பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட,
தேசிய தகவலியல் மையம் (NIC) அமைப்பிலிருந்து ஸோஹோ மெயில் தளத்துக்கு மாற்றி முடித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஓப்பன் சோர்ஸ் செயலிகள் (Word, PDF, PowerPoint போன்றவை) மூலம் ஆவணங்கள் உருவாக்குவது பாதுகாப்பு சிக்கலாக இருப்பதால்,அவர்களுக்கு மாற்றாக Zoho செயலி தொகுப்பு (Zoho Workplace Suite) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம், அக்டோபர் 3 அன்று வெளியிட்ட உத்தரவில் —அரசு அதிகாரிகள் அனைவரும் இனி Zoho தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் எனவும்,இந்த முடிவு இந்தியாவை “சேவை நாடு” நிலையிலிருந்து “தயாரிப்பு நாடாக” மாற்றும் அரசின் பெரிய திட்டத்துக்கு இணங்க எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு தெளிவுபடுத்தியதாவது —NIC மின்னஞ்சல் டொமைன்கள் (nic.in மற்றும் gov.in) மாறாது; ஆனால் தகவல் சேமிப்பும் செயலாக்கமும் Zoho தளத்தில் நடைபெறும்.Zoho நிறுவனத்துடன் 2023ல் ஏழு ஆண்டுகள் கால ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின், Zoho தளத்தின் தரநிலை பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து CERT-In (கணினி அவசரகால மறுமொழி அமைப்பு - இந்தியா)மற்றும் NIC மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.தரவு பாதுகாப்பில் எந்த வித சிக்கலும் இல்லையென உறுதி செய்யப்பட்டபின் தான் Zoho தளத்திற்கு மாற முடிவு செய்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனம் —மத்திய அரசின் தொழில்நுட்ப முதுகெலும்பாக மாறியுள்ளதோடு,இப்போது நாட்டின் டிஜிட்டல் கட்டணப் போரில் கூட முக்கிய வீரராக களமிறங்கவுள்ளது.
‘Made in India’ தொழில்நுட்பத்தின் புதிய முகமாக எழுந்து வரும் Zoho,இப்போது நம்முடைய கையிலேயே இருக்கும் ‘அரட்டை’ வழியாகவே நிதி பரிவர்த்தனைகள் செய்யும் புதிய காலத்தைத் தொடங்கப் போகிறது!
English Summary
Zoho in central government email services WhatsApp over Now Google Pay is also available Zoho Pay is coming