ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன..?! - Seithipunal
Seithipunal


பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்:

உலர்ந்த மணற்பகுதியை விட, ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன?

எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை என்பர்.

ஆனால் இருவேறு பொருட்கள் ஒன்றோடொன்று சேரும்போது, அவற்றின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டு விசை எனக் கூறுவர். மணலும், தண்ணீரும் கலந்த ஈர மணலின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் ஒட்டு விசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும்.

தண்ணீரும், மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது.

ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்ட வைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடல் அழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமல் போகிறது.

வண்ணத்தூரிகையின் இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்து இருப்பதும் ஏன்? வண்ணத்தூரிகையிலுள்ள இழைகளின் அடர்த்தியும், நீரின் அடர்த்தியும் ஏறக்குறைய சமமாகும். எனவே தூரிகையை நீரினுள் வைத்திருக்கும்போது நீரின் மிதப்பாற்றல் காரணமாக தூரிகையின் இழைகள் மேலெழும்புகின்றன.

இதன் விளைவாக இழைகள் தனித்தனியே பிரிந்து நிற்கும். தண்ணீரால் நனைக்கப்பெற்ற நிலையில், தூரிகையை நீருக்கு வெளியே எடுக்கும்போது இழைகளின் மூலக்கூறுகளுக்கும்  தண்ணீரின் மூலக்கூறுகளுக்கும் இடையே உண்டாகும் ஒட்டுவிசையின் காரணமாக இழைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பிரியாமல் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Water Sand Very Good To walk 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->