விசைப்பலகையில் எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை?! - Seithipunal
Seithipunal


சில வியப்பூட்டும் தகவல்கள்:

தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை?

விசைப்பலகையில் எழுத்துக்கள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துக்கள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதை காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துக்கள் விசைப்பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசை எழுத்துக்களின் மீது தான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும்.

ஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவர்ட்டி ஆங்கில விசைப்பலகை முழுத்திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் ந என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை. மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப்பலகையின் சில குறைபாடுகள்.

இக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமல் போய்விட்டன.

சிலந்தி, தான் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் எப்படி இருக்கிறது?

சிலந்திப் பூச்சியின் பின்புறம், மெல்லிழைகளை உருவாக்கும் மூன்று உறுப்புகளைக் கொண்ட தொகுதி ஒன்று உள்ளது. இதன் மூலம் இழைகளை உற்பத்தி செய்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்கும் வலையை சிலந்தி உருவாக்குகிறது.

பூச்சிகள் பறக்கும்போது இவ்வலையில் தட்டுப்பட்டால், அவற்றின் பறக்கும் செயல் தடைபடுகிறது. அவ்வாறு தடைபட்டவுடனே வலையில் இருக்கும் சிலந்தி முட்டிமோதி தன் நச்சுக் கொடுக்குகளைப் பயன்படுத்தி அப்பூச்சிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்கிறது.

பூச்சிகளுக்கோ, வலையில் மோதி தமது பறக்கும் செயல் தடைபட்டவுடனே, ஏதும் தோன்றாமல் திகைப்படைந்து, சிலந்தி விரித்த வலையில் எளிதாகச் சிக்கிக் கொள்கின்றன. ஆனால் சிலந்தி தான் பின்னிய வலையின் பரப்பு முழுவதையும் நன்கு அறிந்திருப்பதால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறது. சில சிலந்திகள் கோந்து போன்ற திரவத்தை வெளியிடுவதால், பறக்கும் பூச்சிகள் அதில் எளிதாக ஒட்டிக் கொள்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Keyboard did not alphabetical order 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->