FASTag என்றால் என்ன? அதை பெறுவது எப்படி.?! - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், டோல்கேட்களில் FASTag உதவியுடன் டோல்கேட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாம் இந்த தொகுப்பில் FASTag என்றால் என்ன? அதன் சிறப்புகள்? FASTag-யை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம்... 

FASTag என்றால் என்ன? 

FASTag என்பது சுங்கச்சாவடிகளில் பிரத்யேக மின்னணு தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையாகும். 

அதாவது சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பாதைகளை கடந்து செல்லும் வாகனங்களின், சுங்கக்கட்டணத்தை ஆர்.எஃப்.ஐடி என்கிற தானியங்கி இயந்திரம் மூலமாக தாமாக வசூலிக்கப்படும்.

உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டியது தான். இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடர முடியும்.

FASTag-ன் சிறப்புகள் :

எந்தவொரு டோல் பிளாசாவையும் கடந்து செல்லும்போது, FASTag வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பாதைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

அவை உங்கள் RFID-க் கண்டறிந்து படிக்கும் மற்றும் தேவையான கட்டணத்தை prepaid நிலுவையிலிருந்து (தங்களது வங்கி கணக்கு, FASTag இணைய வாலட்) கழிக்கும், மேலும் பயனர் தனது பயணத்தை தடையின்றி டோல் பிளாசா வழியாக தொடரலாம்.

இதன் மூலம் ஒரு டோல் பிளாசாவில் வாகன ஓட்டிகள் ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவோ அல்லது பணம் செலுத்தவோ தேவையில்லை. 

FASTag இல்லாத வாகனம் பிரத்யேக FASTag பாதையில் நுழைந்தால், அந்த குறிப்பிட்ட டோல் பிளாசாவில் சாதாரண கட்டண விகிதத்தில் இருமடங்கு வசூலிக்கப்படும்.

எரிபொருள் சிக்கனம், வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்தல், டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் வசூலித்தல் போன்ற இலக்குகளை முன்வைத்து FASTag தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

FASTag-யை எப்படி பெறுவது?

வாகனத்தின் உரிமை ஆவணங்கள், வாகன உரிமையாளரின் அடையாள அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு FASTag பெறலாம். 

இந்த FASTag-னை தங்களது வங்கி கணக்குடன் இணைத்து டோல் கட்டணங்களை நாம் கட்டலாம். மேலும் நாடு முழுவதும் உள்ள சில டோல் பிளாசாக்களிலிருந்து இதை வாங்கலாம். 

மாற்றாக, இதை அமேசான், பேடிஎம் உள்ளிட்ட இ காமர்ஸ் போர்டல்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்கள், போக்குவரத்து அலுவலகங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளில், FASTag அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

My FASTag ap என்ற ஸ்மார்ட்போன் செயலியின் மூலமும் FASTag அட்டையை பெறலாம்.

FASTag-க்காக சில வங்கிகளை அணுகலாம். HDFC வங்கி, ICICI வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி போன்ற வங்கிகள் தற்போது இதை வழங்குகின்றன.

FASTag பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

NHAI- பூத்களில் FASTag பெறுவதென்றால், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் நகல் போதுமானது.

வங்கி கிளைகளில் FASTag வாங்க வேண்டுமென்றால், கூடுதலாக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is fastag and Usage of fastag


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->