லேண்டர் என்ன ஆனது? தற்போதைய நிலவரம் : இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நிலவின் தென்துருவத்தினை இலக்காக கொண்டு, ஆராய்ச்சி  செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், தரை இறங்குவதற்கு 2.1 கிலோமீட்டருக்கு முன்பு ஆர்பிட்டருடனான தகவல் தொடர்பை இழந்தது. 

இதையடுத்து இந்த திட்டத்தின் முழுமையான வெற்றி கிடைக்காததால் விஞ்ஞானிகள் சோகத்தில் மூழ்கினார்கள். நாட்டு மக்களும் சோகத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் அடுத்த 14 நாட்களுக்குள் லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு உண்டாக்குவதற்கான பணிகளை செய்வோம் என அறிவித்திருந்தார்.

விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரில் இருந்து தெர்மல் இமேஜ் முறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் எடுத்துள்ளதாகவும், விக்ரம் லேண்டருடனான தகவல்தொடர்பு விரைவில் மீட்டமைக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து இருந்தார். 

அதன்பிறகு வேறு எந்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாமல் இருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது அதிகாரபூர்வ தகவலானது வெளியாகியுள்ளது. அதில் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் மூலம் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை விக்ரம் லேண்டரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை. லேண்டருடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VikramLander has been located by the orbiter


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->