ட்விட்டர், இன்ஸ்டாகிராமுடன் போட்டி போடும் வாட்ஸ்அப்.. அசத்தல் அப்டேட்.! 
                                    
                                    
                                   Username method coming soon in WhatsApp 
 
                                 
                               
                                
                                      
                                            அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ்அப்பில் நம்பருக்கு பதிலாக யூஸர்  நேம் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
இந்த அம்சத்தின் படி. இனி நமது ஃபோன் நம்பரை மற்றவர்கள் பார்க்க இயலாது. நாம் யாருக்காவது மெசேஜ் செய்தால், நம் ஃபோன் நம்பருக்கு பதிலாக அவர்கள் நம் பயனருடைய பெயரை மட்டுமே பார்க்க முடியும். இதற்கு முதலில் நீங்கள் ஒரு தனிப்பட்ட பயனரின் பெயரை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
                                     
                                 
                   
                       English Summary
                       Username method coming soon in WhatsApp