குறைந்த விலையில் ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்; விரைவில் விற்பனை துவக்கம்! - Seithipunal
Seithipunal


ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ரியல்மி C31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, ரியல்மி நிறுவனம் தற்போது புதிய C33 ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை விவரங்கள்:

ரியல்மி C33 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை - ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், ரியல்மி C33 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை - ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

* இதில், 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், யுனிசாக் டி612 பிராசஸர், G57 GPU 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

* இத்துடன், டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ எஸ் எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த ஸ்மார்ட்போனில், 50MP பிரைமரி கேமரா, 0.3MP டெப்த் கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

* இதில், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை மற்றும் ப்ளூடூத் 5 மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

* ரியல்மி C33 ஸ்மார்ட்போனில், 5000 எம்ஏஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த ஸ்மார்ட்போன், அக்வா புளூ, நைட் சீ மற்றும் சேண்டி கோல்டு என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

* ரியல்மி C33 ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Realme launched new Realme C33 smartphone model


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->