அரசு கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. 

அதன் பின்னரே மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

மேலும், மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admission open government colleges


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->