ஆன்லைன் ஷாப்பிங் செய்யப் போறீங்களா? உஷார்.! இதையெல்லாம் மறந்துடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


இன்றைய பரபரப்பான காலத்தில் நேரம் ஒதுக்கி, நேரில் சென்று நிதானமாகப் பொருட்களை வாங்கும் பொறுமை யாருக்கும்     இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கே பெஸ்ட் சாய்ஸாக இருக்கிறது. 

புக் பண்ணினோமா... வாசல் தேடி வந்ததும் வாங்கிப்போட்டோமா என்றே இருக்கிறார்கள். ஆனால், இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு முகங்கள் இருக்கின்றன. அதை சரியாகப் புரிந்து வைத்திருப்பது முக்கியம். 

பண்டிகை காலமான தீபாவளி நெருங்கிவிட்டதால், ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனமாக இருக்காவிட்டால், உங்களின் பேங்க் பேலன்ஸ் மொத்தமாக காலியாகிவிடும். 

கேஷ் ஆன் டெலிவரி:

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை எனத் தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியை, ஷாப்பிங் செய்யும் தளம் வழங்குகிறதா? என கவனித்து வாங்கவும். 

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிகமிகப் பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லையென்றால், பொருளை வாங்கும் போது பணம் தருகிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள். ஆர்டர் செய்த பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை, பொருள் உங்கள் கைக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

ஆஃபர் அவசரங்கள் வேண்டாம்:

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும் போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு சில டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று அவசரப்படுத்துவார்கள். 

இதுமாதிரியான ஷாப்பிங்கைத் தவிர்ப்பதுதான் நல்லது. அதேபோல, கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமும், ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. குலுக்கல் முறையில் இலவசமாக உங்களுக்குப் போன் அல்லது கம்ப்யூட்டர் கிடைத்திருக்கிறது. அதற்கு உங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும் என்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது.

போலி இணையதளங்கள்:

போலி இணையதளங்களை நடத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகமாகிவிட்டனர். அவர்கள் அனைவரும் பிரபலமாக இருக்கும் முக்கிய நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர். அதனால், ஷாப்பிங் செய்யும் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். 

லிங்குகளில் வரும் சிக்கல்:

பண்டிகை காலங்களில் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் மூலம் சில கவர்ச்சிகரமான ஆஃபர்களை உள்ளடக்கிய லிங்குகள் வருவதை பார்த்திருப்பீர்கள். அந்த லிங்குகள் பெரும்பாலும் மோசடியாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வாய்ப்புகள் உண்டு. 

பிரபலமான நிறுவனங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட அந்த லிங்குகளை நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் வங்கி தகவல்களை திருடி, மொத்த பேலன்ஸையும் காலி செய்து விடுவார்கள். இதில் நீங்கள் உஷாராக இருப்பது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

online shopping important matters


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->