ஒரே ஒரு பைசா கூட குறையாது! ரயிலில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் முழு பணத்தை பெறலாம்! எப்படி தெரியுமா?
Not a single penny will be lost If you cancel your train ticket you can get your full money back Do you know how
இந்திய ரயில்வே மற்றும் IRCTC வழங்கும் சில சிறப்பு விதிகளின்படி, பயணத்தில் சிக்கல் ஏற்பட்டால், டிக்கெட் தொகையை முழுமையாக அல்லது ஒரு பகுதியைத் திரும்பப் பெறலாம். இதற்கான முக்கிய நிபந்தனை, TDR (Ticket Deposit Receipt)-ஐ சரியான காரணத்துடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்வதுதான்.
தகவல்கள் வருமாறு:
ரயில் ரத்து / பாதை மாற்றம் : ரயில் ரத்து செய்யப்பட்டாலோ, பாதை மாற்றப்பட்டு உங்கள் ஏறும் அல்லது இறங்கும் நிலையத்தைத் தவிர்த்தாலோ, முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும். இதற்காக ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் TDR பதிவு செய்ய வேண்டும்.
டவுன் கிரேட் (Downgrade) : பயணிகள் முன்பதிவு செய்திருக்கும் வகுப்புக்கு பதிலாக, கீழ்நிலைக் கிளாஸ் கொடுக்கப்பட்டால், அந்த இரு வகுப்புகளின் கட்டண வித்தியாசம் திரும்ப வழங்கப்படும். இதற்கு TTE-யிடமிருந்து எழுத்துப்பூர்வ சான்றிதழ் பெற வேண்டும்.
கூடுதல் பெட்டி இணைக்கப்படாமை : சில சமயங்களில் அதிக கூட்டத்துக்காக இணைக்கப்படும் சிறப்பு பெட்டிகள் சேர்க்கப்படவில்லை என்றால், மேலும் பயணிக்கு வேறு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றால், 100% பணம் திரும்ப வழங்கப்படும்.
AC செயலிழப்பு : AC வகுப்பில் டிக்கெட் எடுத்தும், AC வேலை செய்யவில்லை என்றால், முழு தொகை அல்லாது, AC மற்றும் Non-AC வகுப்புகளுக்கிடையிலான கட்டண வித்தியாசம் திரும்ப வழங்கப்படும். இதற்காக பயணம் முடிந்த 20 மணி நேரத்திற்குள் TDR பதிவு செய்து, TTE-யிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
TDR பதிவு செய்யும் முறை:
IRCTC இணையதளத்தில் "My Account → My Transactions → File TDR" என்பதில் சென்று, சம்பந்தப்பட்ட PNR-ஐத் தேர்ந்தெடுத்து காரணத்துடன் கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ரயில்வே சரிபார்த்த பிறகு, 30-60 நாட்களில் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கவுண்டரில் டிக்கெட் எடுத்திருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அசல் டிக்கெட்டுடன் நிலைய கவுண்டருக்கு சென்று, படிவம் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
சுருக்கமாக, பயணத்தில் ஏற்படும் சிக்கல்களைப் பொறுத்து, IRCTC மற்றும் இந்திய ரயில்வே, பயணிகளுக்கு நியாயமான முறையில் பணத்தை திரும்ப வழங்குகிறது. பயணிகள் இதற்கான விதிகளை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
English Summary
Not a single penny will be lost If you cancel your train ticket you can get your full money back Do you know how