வானில் பறக்கும் கனவை நிஜமாக்கும் மஸ்க்! -டெஸ்லாவின் அடுத்த அதிரடி முயற்சிக்கு உலகம் வியப்பு...! - Seithipunal
Seithipunal


பெருகி வரும் வாகனங்களால் சாலைகள் நெரிசலால் மூச்சுத் திணறி வருகின்றன. போக்குவரத்து நெரிசல் தற்போது நகர வாழ்வின் அன்றாட பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பயணம் தாமதமாகி, சலிப்பையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியாக, உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் “பறக்கும் கார்” உருவாக்கப் போட்டியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது,“2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரின் முதல் டெமோவை உலகம் காணப் போகிறது.

அது தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் காரின் கனவைப் பற்றி பேசிவந்த மஸ்க், இப்போது அதனை நிஜமாக்கப் போவதாக அறிவித்திருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Musk makes dream flying reality world amazed by Teslas next bold move


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->