பெரிய பிரச்சனையை துவக்கத்திலேயே எச்சரித்த தமிழன்... பாராட்டுகளை தெரிவித்த மைக்ரோசாப்ட்...!! - Seithipunal
Seithipunal


பிரபல இயங்குதளமான மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சனையை சுமார் 21 முறை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்சனையை தமிழக இளைஞர் சுரேஷ் செல்லத்துரை என்பவர் கண்டறிந்துள்ளார். 

இவருக்கு மைரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுமார் 3 நாட்கள் சுற்றுப்பயணம் வந்துள்ள இவர், பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப முதலீட்டாளர் சந்திப்பில் பேசினார். 

இந்த நேரத்தில், கடந்த 2018 ஆம் வருடத்தில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான விபரத்தை கண்டறிந்து, இதற்காக பரிசுத்தொகை பெற்ற முதல் மூன்று இளைஞரில் 21 வயதாகும் சுரேஷ் செல்லத்துரையும் ஒருவர் ஆவார்.  

இதனைப்போன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியை சார்ந்த 13 வயதுடைய சிறுமியான நம்யா ஜோஷிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். நம்யா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மினி கிராப்ட் வீடியோ கேம் மற்றும் ஸ்கைப் செயலியின் மூலமாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

microsoft Ceo appreciate to tamil peoples


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal