ஜியோ–ஏர்டெல்–வோடாபோன் ஐடியா ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு? இடியை இறக்கும் நிறுவனங்கள்!
Jio Airtel Vodafone Idea recharge charges hiked again Companies taking the plunge
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் இன்னும் சில நாட்களில் கூடியளவில் உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களில் சில தேர்ந்தெடுத்த பிளான் கட்டணங்களை உயர்த்திய இந்த நிறுவனங்கள், இப்போது முழு அளவில் புதிய கட்டண உயர்வை அறிவிக்கத் தயாராக இருப்பதாகத் தொலைத்தொடர்பு துறையில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
செப்டம்பர் காலாண்டில் தொலைத்தொடர்பு துறையின் வருவாயில் 10% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு டிசம்பரிலும் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வருவாய் வீழ்ச்சி காரணமாக, நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்திருக்க வாய்ப்பு அதிகம்.
வெளியான தகவலின்படி, ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகியவை குறைந்தபட்சம் 10% முதல் 12% வரை ரீசார்ஜ் விலையை உயர்த்தும் திட்டத்தில் உள்ளன. இந்த உயர்வு 2026 புத்தாண்டு வாரத்திலேயே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
முன்னதாக சில பிளான்களில் உயர்வு நடந்தது:
வோடாபோன் ஐடியா அதன் ஆண்டு பிளான் கட்டணத்தை 12% உயர்த்தி ரூ.1,999 ஆக மாற்றியது.
84 நாள் பிளானிலும் 7% உயர்வு செய்தது.
ஏர்டெல் தனது வாய்ஸ்-ஒன்லி பிளான் கட்டணத்தை ரூ.10 உயர்த்தியது.
பிஎஸ்என்எல் கட்டண உயர்வுடன் சில பிளான்களின் செல்லுபடி நாட்களையும் குறைத்தது.
இந்த நிலையில், மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு ஏற்பட்டால், பொதுமக்களுக்கு இது மேலும் ஒரு கூடுதல் நிதிச்சுமையாக மாறக்கூடும்.
தொலைத்தொடர்பு விலைகள் கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 2026 ஆரம்பமே புதிய ரீசார்ஜ் விலை அதிர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும்.
English Summary
Jio Airtel Vodafone Idea recharge charges hiked again Companies taking the plunge