Atm-ல் Cancel பட்டனை இரண்டு முறை அழுத்தினால் PIN பாதுகாப்பாக இருக்குமா? உண்மை என்ன? – PIB விளக்கம்
Is pressing the Cancel button twice at the ATM safe for PIN What is the truth PIB explanation
சமூக வலைதளங்களில், ஏடிஎம் மூலம் பணம் எடுத்து முடித்த பிறகு “கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால், உங்கள் ATM பின் பாதுகாப்பாக இருக்கும்” என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பலரும் இதை உண்மையென நம்பி பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
ஆனால், இந்த தகவலை PIB Fact Check அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த அறிவுறுத்தலும் வெளியிடவில்லை. ATM இயந்திரங்களில் உள்ள ரத்து (Cancel) பட்டன் ஒரு பரிவர்த்தனையை நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது மோசடிகளை தடுக்கவோ அல்லது பின் எண்களை பாதுகாக்கவோ உதவாது.
ATM மோசடிகள் பொதுவாக ஸ்கிம்மிங் (Skimming), பிஷிங் (Phishing), கீபேட் டேம்பரிங் (Keypad Tampering) போன்ற முறைகளில் நடைபெறுகின்றன. குற்றவாளிகள் கார்டு விவரங்கள் மற்றும் பின் எண்களை திருடி பணத்தை பறித்து வருகின்றனர்.
உங்கள் ATM கார்டு மற்றும் பின் எண்களை பாதுகாக்க வேண்டிய சில வழிமுறைகள்:
ATM இயந்திரத்தில் கார்டு ஸ்லாட், கீபேட் மற்றும் திரை மீது ஏதேனும் அசாதாரண சாதனம் பொருத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
சந்தேகமுள்ள ATM-ஐ பயன்படுத்தாமல் உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும்.
உங்கள் ATM PIN-ஐ 3–6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள். பிறந்த தேதி, 1234, 1111 போன்ற எளிய எண்களைத் தவிர்க்கவும்.
SMS / மின்னஞ்சல் அலர்ட் சேவையை இயக்கி வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகமான பரிவர்த்தனைகளை உடனே கண்டறியலாம்.
கார்டு தொலைந்தால் உடனே Block செய்யுங்கள்.
ATM-ல் பிழை ஏற்பட்டால், அங்கு இருப்பவர்களிடம் உதவி கேட்காமல் நேரடியாக வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அதனால், “கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால் பாதுகாப்பு கிடைக்கும்” என்ற வதந்தி பொய்யானது. உங்கள் பாதுகாப்பு, நீங்கள் பின்பற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.
English Summary
Is pressing the Cancel button twice at the ATM safe for PIN What is the truth PIB explanation