விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்‌எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி.! இஸ்ரோ தலைவர்‌ தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில், பூமியை கண்காணிப்பதற்காக 2268 எடை கொண்ட ஈ ஓ எஸ்-3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று அதிகாலை ஆந்திராவில் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

பூமியின்‌ தட்ப வெப்பநிலை, புயல்‌, மழை, உள்ளிட்டவற்றை கண்காணிக்க உதவும்‌ ஈ ஓ எஸ் - 03 என்ற புவிக்‌ கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இந்த ராக்கெட்டில் முதல் முறையாக வெப்பத்திலிருந்து அதிக எடை கொண்ட செயற்கை கோள் மற்றும் அதிலுள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது 

இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில்‌ இருந்து விண்ணில்‌ ஏவப்பட்ட ஜிஎஸ்‌எல்வி எப்-10 ராக்கெட்டின்‌ கிரையோஜெனிக்‌ இன்ஜினில்‌ ஏற்பட்ட கோளாறால்‌ திட்டம்‌ தோல்வியடைந்தது என இஸ்ரோ தலைவர்‌ சிவன்‌ தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GSLV F10 plan failure


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->