கணவர் உயிருடன் இருக்க, மனைவி கள்ளக்காதலன் உடன் ஓட்டல் அறையில்! - 112 அழைப்பு; ஜான்சி நகரில் பரபரப்பு!
While her husband alive wife hotel room her lover 112 call commotion Jhansi city
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் நவபாத் பகுதியில், பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த சம்பவம், சில நிமிடங்களில் நகரமே பேசும் விவகாரமாக மாறியது.மனைவி கள்ளக்காதலனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், பல மாதங்களாக அவரது அசைவுகளைக் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டைவிட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், “எங்கே போகிறாள்?” என்ற சந்தேகம் கணவரை வாட்டி வந்துள்ளது.கடந்த 11-ந் தேதி, மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டலுக்கு செல்லப் போவதாக உறுதியான தகவல் கிடைத்ததும், கணவர் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இருவரும் ஓட்டலுக்குள் நுழைந்தவுடன், நிலைமை கைவிடப்படக் கூடும் என உணர்ந்த அவர், உடனடியாக 112 அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.போலீசார் விரைந்து வந்து, ஓட்டலின் 103-ம் எண் அறையின் கதவை திறந்தபோது, உள்ளே இருந்த காட்சி அனைவரையும் உறைய வைத்தது.
மனைவி அதிர்ச்சியில் உறைந்த நிலையில், கள்ளக்காதலன் தப்பிக்க முயன்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்தார்.ஓட்டல் முழுவதும் கூச்சலும் வாக்குவாதமும் வெடித்தது. ஓட்டல் ஊழியர்கள், அருகிலிருந்த அறைகளில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் என பலர் ஓடி வந்து திரண்டனர்.
அப்போது அனைவரையும் திகைக்கச் செய்த தருணம் – போலீசாரிடம் கத்திக் கொண்டிருந்த மனைவி திடீரென கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த கள்ளக்காதலனை தானே இழுத்து வெளியே கொண்டு வந்தார். அந்தக் காட்சியை பார்த்த கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் கணவருடன் வாழவில்லை. அவர் என் வாழ்க்கையில் முடிந்த அத்தியாயம். நான் என் விருப்பத்தின்பேரிலேயே இங்கு வந்தேன். கள்ளக்காதலனுடன் வாழ விரும்புகிறேன்; இது என் தனிப்பட்ட முடிவு” என வெளிப்படையாக கூறினார்.
மேலும், “நான் விவாகரத்து பெறத் தயார். யாரும் என்னை தடுக்க முடியாது” என போலீசாரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இந்த தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஆரம்பத்திலேயே கருத்து வேறுபாடுகள் உச்சம் பெற்றுள்ளன. விவகாரம் நீதிமன்றம் வரை சென்றபோது, சமரசத்தின் பேரில் சிப்ரி பஜாரில் உள்ள மனைவியின் மாமா வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.
ஆனால் அந்த ஒப்பந்தமும் விரைவில் முறிந்தது.இதுகுறித்து கணவர் கூறுகையில், “ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். பள்ளியில் வேலை கிடைத்த பிறகு, என் மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வளவோ முயன்றேன்; எதுவும் பயனளிக்கவில்லை” என்றார்.
மேலும், “விவாகரத்துக்கு சம்மதிக்க ரூ.10 லட்சம் வேண்டும் என மனைவி மிரட்டுகிறார். இதனால் கடும் மனஅழுத்தத்தில் உள்ளேன்” என கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நவபாத் காவல் நிலைய அதிகாரி ரவி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “112 அவசர அழைப்பின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விவகாரம் விசாரணையில் உள்ளது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
திருமண உறவை தனிப்பட்ட விருப்பம் என்ற பெயரில் முறித்து, விவாகரத்து மற்றும் பணம் கோரும் விவகாரம் சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஜான்சியில் நடந்த இந்த சம்பவம் தற்போது உத்தரப் பிரதேசம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
While her husband alive wife hotel room her lover 112 call commotion Jhansi city