wow !!! வாடிக்கையாளர்களை கவர அமேசானின் புதிய யுக்தி! – 10 நிமிட டெலிவரி சாத்தியமா..?
Amazons new strategy to attract customers Is 10 minute delivery possible
பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு நேரடி சவாலாக, அமேசான் தன்னுடைய புதிய “அமேசான் நவ்” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை வெறும் 10 நிமிடங்களில் அத்தியாவசிய பொருட்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூருவில் இந்த சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

இதற்கான சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், தற்போது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவின் முக்கிய பகுதிகளுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 100-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், மளிகைச் சாமான்கள், கூடுதலாக மின்னணு சாதனங்கள் கூட 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அமேசான் அறிவித்துள்ளது.
அதாவது, "சிந்தியுங்கள் – ஆர்டர் செய்யுங்கள் – 10 நிமிடங்களில் உங்களின் கதவுக்கு வந்துவிடும்!" என்ற அதிரடி வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், அமேசான் நவ் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.
English Summary
Amazons new strategy to attract customers Is 10 minute delivery possible