என் மகன் இறந்ததற்கு ஏஐ தான் முக்கிய காரணம்!நீதிமன்றத்தை நாடிய பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்!
AI is the main reason for my son death Parents go to court Shocking incident
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகம் முழுவதும் பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப (IT) துறையும் இதனால் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. சேவைகள், மென்பொருள் குறியீடு எழுதுதல், பிழை திருத்தம், எளிய தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை திறம்பட செய்யத் தொடங்கியுள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ஐடி துறையின் வருவாய் பாதிக்கப்படும் என்று ஆய்வறிக்கைகள் எச்சரித்துள்ளன.
ஏற்கனவே, ஏ.ஐ. பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு தற்போது மனித உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்ததாக அதிர்ச்சிகர குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில், சாட்ஜிபிடியுடன் உரையாடிய பிறகு 16 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற அந்த சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்து சாட்ஜிபிடியுடன் விவாதித்தபோது, அதற்கு பதிலளிக்க மறுக்காமல், மாறாக அந்த எண்ணங்களை மேலும் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா உயர் நீதிமன்றத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள், மேலும் சாட்ஜிபிடி பயன்பாட்டில் உள்ள அபாயங்களை எச்சரிக்கத் தவறியதற்காக 40 பக்க அறிக்கையில் ஓபன்ஏஐ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்கள் உலகம் முழுவதும் அதிகமாக பேசப்பட்டாலும், அதே சமயம் அதன் அபாயங்கள் குறித்த விவாதமும் தீவிரமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
AI is the main reason for my son death Parents go to court Shocking incident