முறையான சாலை வசதி இல்லை.. கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் தூக்கி சென்ற இளைஞர்கள், வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


மலைபகுதியில் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி அழைத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றானர், இந்த பகுதியில் சரியான சாலை வசதி , மின்சாரம், குடிநீர் வசதி இல்லை என கூறப்படுகிறது.  சரண்யா என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார். நான்கு மாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

 மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனில் குழிப்பட்டியில் இருந்து கீழே பொன்னாலம்மன் சோலை வரை பல ஆயிரம் அடி மலைப்பகுதியில் அழைத்து செல்ல வேண்டும். ஆனால், அந்த பகுதியில் முறையான சாலை வசதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால்,அங்குள்ள வாலிபர்கள் அவரை தொட்டில் கட்டி தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த பகுதிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths took the pregnant lady to hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->