மதுரை || கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறு.. கோவில் திருவிழாவில் ரகளை..! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவில் கஞ்சா போதையில் தகராற்று ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியில் உள்ள புதுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுப்பட்டனர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கிருந்தவர்களும் கோவில் நிர்வாகிகளும் அவர்களை கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரிவாளை கொண்டு கூட்டத்தினரை தாக்க முயன்றனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths quarrel over cannabis and alcohol


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal