ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு - பெற்றத் தாயிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக் கொலை.!
youth murder for harassment issue in ariyalur
அரியலூர் மாவட்டத்தில் மனைவியை இழந்து வசிக்கும் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் கூலி வேலை செய்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவி இறந்ததால் மது பழக்கத்துக்கு அடிமையான அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் தனது தாயிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது மகனை கண்டித்துள்ளார். மேலும், தனது உறவினர்களிடமும் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை அடித்துக்கொலை செய்ததாக வாலிபரின் தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth murder for harassment issue in ariyalur