தெருநாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு - ராமநாதபுரத்தில் சோகம்.!!
youth died for street dog bite in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ். இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், ராஜபிரகாஷை கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெருநாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது.
இதனால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் ராஜப்பிரகாஷை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜபிரகாஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died for street dog bite in ramanathapuram