திடீரென ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமான இளைஞர்..! சற்று நேரத்தில் ஏற்பட்ட துயரம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே  ஊர்மக்கள் இளைஞர் ஒருவரைத் தவறாக புரிந்து கொண்டு தாக்கியதில் உயிர்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சியை அடுத்து இருக்கும் காரை என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் பெட்ரோல் பங்க் ஊழியராக இருக்கின்றார். வழக்கம்போலவே நேற்று மதியம் பெட்ரோல் பங்க பணிக்காக இரு சக்கரவாகனத்தில் சென்று இருக்கின்றார். 

அப்பொழுது அவருக்கு வயிறு கலக்கி இருக்கின்றது. எனவே, வரவே மலம் கழிக்க ஒதுக்குபுறமாக ஒரு இடத்தில் இறங்கி ஆடைகளைக் கழட்டி இருக்கின்றார். இப்படி அரை குறையாக அவர் நிற்பதை கண்ட வயலில் வேலை செய்த பெண்கள் கத்திக் கூச்சல் போட்டு இருக்கின்றனர். 

எனவே, அருகில் இருந்த ஆண்கள் அவரைத் துரத்த ஆரம்பித்து இருக்கின்றனர். இத்தனைப் பேர் துரத்தி கொண்டு வருவதை கண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். ஆனால் ஊர் பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து கட்டிவைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடித்து இருக்கின்றனர். 

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரிடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நடந்ததை தெரிவிக்க பின்னர் அவரை விடுவித்து அனுப்பி இருக்கின்றனர். ஆனால், வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man suddenly taking off clothes


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal