"கல்யாணத்திற்கு காசில்லை.. உதவாத சொந்தங்கள்" உயிரை மாய்த்த கடலூர் இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே இளைஞர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திருமணம் நடத்த கடன் கிடைக்காததால் விரக்தியில் அந்த இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தைச் சார்ந்த  முருகேசன் என்பவனின் மகன் ரகுவரன். லாரி மெக்கானிக்கான இவருக்கும்  புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தனது தந்தை இறந்துவிட்ட நிலையில்  இந்த இளைஞர்தான் தனது தாயுடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்திருக்கிறார். திருமணத்திற்காக பொருளாதார தேவைகளிருந்ததால் இவர் கடன் கேட்டிருப்பதாக தெரிகிறது.

ஆனால் இவருக்கு கடன் தர யாரும் முன் வரவில்லை. இதனால் மிகவும் விரக்தியில் இருந்திருக்கிறார் அந்த இளைஞர். தனது திருமணத்திற்கு யாரும் கடன் தந்து உதவ முன் வராததால் எனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man committed sucide nar cudalore for refusal of loan for his marriage


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->