காதலுக்கு தாய் தந்தை எதிர்ப்பு., மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்..!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!! - Seithipunal
Seithipunal


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வருபவர் லலித் குமார். இவரது மகன் சுரேஷ் குமார்(22). இவர் தனது தந்தையின் நர்சரி கார்டனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சுரேஷ்குமாருக்கும் அந்த பகுதியில் இளம்பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர். இது இரண்டு குடும்பத்தினருக்கு தெரியவரவே இரு குடும்பத்தினரும் கண்டித்துள்ளனர். இதனால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று  வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மயங்கி கிடப்பதை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குபதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide because his parents protested against love


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal