திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!
Young girl committed Suicide Near Ramanathapuram
காதலன் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சௌமியா (25). பி பட்டதாரியான இவர் பணித் தேர்வுக்கு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார். அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஷேக் முகமது சௌமியா பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

சௌமியாவை திருமணம் செய்து கொள்வதாக அவரது வீட்டிற்கும் வரவழைத்துள்ளார்.
இந்த நிலையில் சௌமியா எப்பொழுது திருமணம் என கேட்கவே ஷேக் முகமது பெற்றோரிடம் கூட்டி சென்றார் அப்போது அவரது பெற்றோர் சௌமியா அழகாக இல்லை எனவும் வரதட்சனை அதிகமாக தரவேண்டும் எனவும் கூறி திருமணத்தை மறுத்துவிட்டனர்.
இதனால், சௌமியா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சௌமியா எழுதிய கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது சாவுக்கு காரணம் ஷேக் முகமது அவருடைய பெற்றோர் மற்றும் அவருடைய மாமா என்றும் அவர் கைப்பட எழுதி வைத்துள்ளதாகவும் மேலும் பல தகவல்கள் அந்த கடிதத்தில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஷேக் முகமது மற்றும் அவரின் குடும்பத்தினரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Young girl committed Suicide Near Ramanathapuram