உலக உணவு தினம்!.
உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16 ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் உலகின் சுவையான உணவுகளை குறித்து பேசுவதற்காக மட்டுமில்லாமல், சாப்பிட வாய்ப்பில்லாத பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. பல நாடுகளில், குறிப்பாக உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில், பட்டினி என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த சிக்கலை தீர்க்க அது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.
தேசிய அகராதி தினம்!.
தேசிய அகராதி தினம் நோவா வெப்ஸ்டரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர் 16 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கர் நோவா வெப்ஸ்டர் தனது முதல் அகராதியை 1806 ஆம் ஆண்டில் வெளியிட்டார், ஆங்கில மொழியின் ஒரு தொகுப்பு அகராதி . வெப்ஸ்டர் உடனடியாக 1807 இல் ஆங்கில மொழியின் அமெரிக்க அகராதி என்ற விரிவாக்கப்பட்ட மற்றும் முழுமையான விரிவான அகராதியைத் தொகுக்கத் தொடங்கினார் . அதை முடிக்க இருபத்தி ஏழு ஆண்டுகள் ஆனது. வார்த்தைகளின் சொற்பிறப்பியல் மதிப்பீடு செய்ய, வெப்ஸ்டர் பழைய ஆங்கிலம் (ஆங்கிலோ-சாக்சன்), ஜெர்மன், கிரேக்கம், லத்தீன், இத்தாலியன், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஹீப்ரு, அரபு மற்றும் சமஸ்கிருதம் உட்பட இருபத்தி ஆறு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
உலக மயக்கவியல் தினம்!.
உலக மயக்கவியல் தினம்
World Anaesthesia Day ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி நினைவுகூரப்படுகிறது.
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் என்பவர் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இதனைப் பரிசோதித்தார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.