உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்..பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!
World Drug Day Students who went in a rally to raise awareness
கோத்தகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி ஒரஷொலயன்ஸ் வேல்பேர் டிரஸ்ட்", "பிரஜாபிதா பிரம்மா குமாரிஸ் வித்யாலயா" என்ற அமைப்புடன் இணைந்து, கோத்தகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி ஒரு விழிப்புணர்வு பேரணியை வெற்றிகரமாக நடத்தினர்.
இப்பேரணியின் நோக்கம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், போதையற்ற சமுதாயத்தை உருவாவதற்கான பேரலையை உருவாக்குவதுமாகும். 600க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
உணர்வுபூர்வமான வாசகங்களை முழக்கத்துடன் எடுத்துச் செல்லும் வகையில், இப்பேரணி கோத்தகிரி மார்க்கெட் → பஸ் ஸ்டாண்ட் → ராம்சந்த் → ஜான்ஸ்டோன் சதுக்கம் → கோத்தகிரி மார்க்கெட் என்ற பாதையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிரம்மா குமாரிஸ் அமைப்பினர், போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகளை அடிப்படையாகக் கொண்ட சாலையோர நாடகத்தை சிறப்பாகக் கொணர்ந்தனர்,
இது மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. ஜீவானந்தம், நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். அவருடன் 19 ஊர் தலைவர் ராம கவுடர் அவர்களும் கலந்து கொண்டார். டிரஸ்ட் தலைவரான திரு. ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுரேஷ் நஞ்சன் வரவேற்புரை வழங்கினார். திரு. ராமகிருஷ்ணன் நன்றி உரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். டிரஸ்ட் உறுப்பினர்கள் திரு. சத்தியமூர்த்தி, நந்தகுமார், திரு. முரளிராஜ் மற்றும் . மனோகரன் ஆகியோரின் ஒத்துழைப்பும், பள்ளித் மாணவர்களின் ஆதரவும் இந்நிகழ்வை சிறப்பாக நடத்த உதவியது. இப்பேரணி, போதை எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த குரலாக நம்மை ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்தது. மேலும் இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
English Summary
World Drug Day Students who went in a rally to raise awareness