மாற்றுத்திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்களையும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணிணிகளையும் வழங்கி, வேலை வாய்ப்புடன் கூடிய மென்பொருள் திறன் பயிற்சியையும் திறந்து வைத்தார். 

அதன் பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது:- "மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். அவர்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும். தற்போது, மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை ஒரு விதமான அன்பு பாதை. அதில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ச்சியடைந்தேன்.

தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுத் தொகை ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து உயர்த்தி வழங்கப்படும். மேலும், அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world disabled person day chief minister satlin speach in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->