புதிய பாலம் அமைக்கும் பணி..பூஜை போட்டு துவக்கி வைத்த அருண்குமார் MLA ! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சி வார்டு எண் 1, திருமுருகன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகளை அருண்குமார் MLA பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாநகராட்சி வார்டு எண் 1, திருமுருகன் நகர் அருகே சின்வேடம்பட்டி வாய்க்கால் குறுக்கே 2024 - 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணியினை கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG_அருண்குமார் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாநகராட்சி வார்டு எண் 1, திருமுருகன் நகர் அருகே சின்வேடம்பட்டி வாய்க்கால் குறுக்கே ஏற்கனவே சிறிய அளவிலான பாலம் உள்ளது.

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து பாலத்தினை விரிவாக்கம் செய்யும் வகையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் அவரது 2024 - 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 25 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார்.

இதனையடுத்து பாலம் அமைக்கும் பணியினை கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG_அருண்குமார் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ.விற்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் வனிதாமணி, அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், 1வது வார்டு செயலாளர் சாந்தி பூஷன், எம்ஜிஆர் இளைஞர் இணைச் செயலாளர் எம் ஆர் நாகராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேஷ், செயலாளர்கள் பிரகாஷ், சுரேஷ் பாபு,ஜெயக்குமார், காளிச்சாமி, கழக நிர்வாகிகள் செல்வராஜ் செல்வகுமார் பார்த்திபன் திருநாவுக்கரசு ஐ டி ஐ ஜெயராஜ் சரவண பாண்டியன், மோகன்ராஜ், பொதுப்பணித்துறை AE ரமேஷ், ஒப்பந்ததாரர் பாலச்சந்தர் என்கின்ற ரவி, திருமுருகன் நகர் நலச்சங்க நிர்வாகிகள் சங்கர் சுப்பு, கிருஷ்ணசாமி, சுரேஷ்குமார், மனோகரன், பிரகாஷ், நாராயணன், குஞ்சு, கிருஷ்ணன், ஆர்யா சண்முகம், கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Work to construct a new bridge MLA Arunkumar started it with a pooja ceremony


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->