அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி... திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் செய்த விபரீத செயல்.!!
women sucide near kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் மகள் ஜெமலா. நர்சிங் முடித்துள்ள இவரும் இனயம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இதையறிந்த ஜெமலாவின் பெற்றோர் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சரியான வேலை இல்லாமல் இருந்து வந்த நிதின் வெளிநாடு செல்வதாக கூறியதனால் தம்பதியினருக்கு இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு பதறிப்போன ஜெமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஜெமலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் விரைந்து வந்து ஜெமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
women sucide near kanniyakumari