தேனி || மகனை பள்ளியில் இருந்து நிறுத்திய விரக்தி - தாய் எடுத்த விபரீத முடிவு.!!
women sucide in theni for son stop studies
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்-தீபா தம்பதியினர். இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவன் சரியாக படிக்கவில்லை, அதனால் பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என்று கூறி மாணவனை பள்ளியில் இருந்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த தாய் தீபா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சூழலில் செல்வம் வீட்டுக்கு வந்த போது மனைவி தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செல்வத்தின் அழுகல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women sucide in theni for son stop studies