லிப்டில் மாட்டிக் கொண்ட பெண்கள்... பதறி அடித்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்... நடந்தது என்ன?
women stuck elevator neighbors running away panic What happened
சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அங்கு சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றது. அங்கு லிப்ட் வசதி இருக்கும் நிலையில், நேற்று இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு லிப்டில் 2 பெண்கள் பயணித்தனர்.

அப்போது திடீரென அது பழுதாகி நடுவழியில் நின்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் பயத்தில் அலறினர்.இதைத் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டனர்.அப்போது அங்கு சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், லிப்டின் கதவை நீண்ட நேரம் போராடி கான் பிறகு உடைத்தனர்.
அதன் பிறகு அதில் சிக்கிக் கொண்ட 2 பெண்களும் பாதிப்பின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்தும் அவர்கள் தெரிவித்தது,"உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது" என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,"ஒரு அவசரத்திற்கு கூட இந்த லிப்டை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரியாக பராமரிப்பது இல்லை. அடிக்கடி இது போன்று நாங்கள் லிப்டில் சிக்கிய கொள்கிறோம்.
லிப்டில் செல்லும் போதெல்லாம் அச்சத்தோடு செல்ல வேண்டியா நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்" என்றனர்.இதனிடையே, லிப்ட்டில் சிக்கி பெண்களை அப்பகுதி மக்கள் கதவை உடைத்து மீட்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
women stuck elevator neighbors running away panic What happened