பல்வேறு வகையான பொடுகு தொல்லைக்கு காரணம் தெரிந்தால் எளிதில் போக்கிவிடலாம் ...!
If you know cause various types of dandruff you can easily get rid of it
பொடுகு ஏற்படக் காரணங்கள் :
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என்று அழைக்கிறோம்.
கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது.
முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும்.
கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம்.
வானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம்.
இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும். இதனால் பொடுகானது அதிகமாக தலையில் உண்டாகின்றது.
அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாகத் தலையை துவட்டாமல் இருப்பது.
தினசரி ஒழுங்காக குளிக்காமல் இருந்தாலும் பொடுகு வரும்.
எக்ஸீமா, சொறாஸிஸ் போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரும்.
அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரும். கண்ட கண்ட சாம்பு தலையில் தேய்ப்பதனாலும் வரும்.
மனஅழுத்தம் கவலையாலும் வரும்.
அதிக உப்பு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுகிறபோது பொடுகு ஏற்படுகிறது.
சத்துணவுப் பற்றாக்குறை, மரபியல் காரணங்கள். அதிக வியர்வை போன்றவற்றால் ஏற்படும்.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
பொடுகு வராமல் தடுக்கும் முறைகள் :
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.
தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது கூடாது. பொதுக் குளியலறையைத் தவிர்த்து விட வேண்டும்.
தலை முடியை பராமரித்தல், சரியான உணவு பழக்கம், டென்ஷன் இல்லாதிருத்தல், பரம்பரைத் தொற்று ஏற்படாதிருத்தல். அதிகமாக, இனிப்பு, கொழுப்பு, மாவுச் சத்து பொருட்களை உண்பது கூடாது. பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
English Summary
If you know cause various types of dandruff you can easily get rid of it