சுற்றி சுற்றி ஓடிய குட்டிபோட்ட தாய் நாய்.. பெண் செய்த காரியத்தால் நெகிழ்ச்சி.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு அருகில் கனமழை நின்ற பின் கால்வாயில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு கத்திக் கொண்டே தாவியபடி ஒரு பெண் நாய் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. 

இதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் கட்டட பணியில் ஈடுபட்ட ஒரு பெண் மட்டும் நாயின் வேதனையை உணர்ந்து அந்த நாயின் குட்டிகள் கால்வாய் நீரில் சிக்கி இருப்பதை தெரிந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, கால்வாயில் இருந்த அடைப்புகளை சரி செய்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று நாய்க்குட்டிகளையும் அந்தப் பெண் மீட்டு தாய் நாயிடம் ஒப்படைத்து இருக்கிறார். 

நீரில் நனைந்ததால் குளிரில் நடுங்கிய அந்த குட்டி நாய்களை தாய் நாய் தனது நாவால் வருடி குளிரை போக்கிக் கொண்டிருந்தது. தாய் நாய்க்கு ஒரு பெண் உதவி இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. மனிதம் இன்னும் சாகவில்லை என்பதை இதுபோல சில சம்பவங்கள் தான் அவ்வப்போது நமக்கு உணர்த்துகின்றன. அந்த சகோதரிக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women saved little dogs from water in kanjipuram


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal