இதெல்லாம் ஒரு குத்தமா.? பைத்தியக்கார அண்ணனால் பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ராமகிருஷ்ணன் எனும் நபர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லையா என்ற மகனும், சரஸ்வதி என்ற மகளும் இருந்துள்ளனர். சரஸ்வதி நர்சிங் படித்து விட்டு கவரிங் நகை விற்பனை செய்து வந்துள்ளார். 

மேலும், டைலரிங், எம்பிராய்டரி போன்ற பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். எனவே, அடிக்கடி செல்போனில் பேசும் நிலை ஏற்பட்டது. இதனை அவருடைய அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் இருவரும் இது குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென விவாதம் முற்றி தவறாக மாறியது. இதில் மிகுந்த ஆத்திரம் அடைந்த சகோதரன் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கை என்றும் பாராமல் சரஸ்வதியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். 

இதனால் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றார். இது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women killed by brother for bad reason 


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal